"தெம்பு இருந்தும் நடிக்க முடியாம கெடக்குறது எவ்ளோ ரணம் தெரியுமா?"- நண்பர்களிடம் கலங்கிய வடிவேலு!

0
முன்னணி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் தொடங்கி சீனியர் நடிகர்கள், புதுமுகங்கள் வரையிலான சினிமா பிரபலங்கள், நிறைய ’ஐபிஎஸ்’ அதிகாரிகள், கொஞ்சம் ’ஐஏஎஸ்’ அதிகாரிகள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கும் ’நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.

விருந்து, இசை, நடனம் முதலான கேளிக்கைகளுடன் அதகளப்பட்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதுதான் இப்போது சினிமா வட்டாரம் முழுக்க விவாதிக்கப்பட்டுவருகிறது.

வடிவேலு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாக்காரர்கள் அதிகம் கூடும் இடத்தில் வடிவேலுவைப் பார்க்க முடிந்ததே அதிசயம்தான். கொஞ்சம் மெலிந்து காணப்பட்ட வடிவேலு நண்பர்கள் மத்தியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மேடையில் கங்கை அமரன் உள்ளிட்ட சிலர் பாடல்கள் பாடி முடித்ததும் மைக் வடிவேலுவின் கைக்கு வந்திருக்கிறது.

Also Read: வாட்ஸ்அப் பார்ட்டியில் வடிவேலு... எங்கே, ஏன்?

சில எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடிக் கூட்டத்தை மெய் மறக்க வைத்தவர், தொடர்ந்து ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற ’கர்ணன்’ படப் பாடலை மிகவும் உருக்கத்தோடு பாடியிருக்கிறார். அதில் வரும் ‘வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ வரிகளைப் பாடும்போது கண்கள் கலங்கி சில நிமிடங்கள் பாடுவதையே நிறுத்தியிருக்கிறார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக் கொண்டு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக்டௌன்லதானே இருக்கேன்’ என அந்த நிமிடத்திலும் எல்லோரையும் சிரிக்கவைத்திருக்கிறார்.

வடிவேலு

'கர்ணன்' பாடலைப் பாடி முடித்து கீழே இறங்கியவர், "நான் என்ன தப்பு செஞ்சேன்? மக்கள் என் பேச்சை ரசிக்கிறாங்கனு கூப்பிட்டாங்க, போனேன்... அதன்பிறகு அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு ரெண்டு தரப்புலயுமே என்னை ஒதுக்கிட்டாங்க. உடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே... நடிக்க ஆசை இருக்கு, உடல்ல தெம்பும் இருக்கு. ஆனா ஒருத்தரும் கூப்பிடாம வீட்டுல அடைஞ்சு கிடக்கிறது எவ்வளவு பெரிய ரணமா இருக்கு தெரியுமா..." என மனம் உடைந்து பேசியிருக்கிறார்.

`நண்பேன்டா’ வாட்ஸ் அப் குழுவில் வேறு என்னவெல்லாம் சுவாரஸ்யங்கள் நடந்தது என்கிற முழு விவரங்கள் நாளை வெளிவரும் ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. தவறாமல் படியுங்கள்!


from தமிழ் சினிமா https://ift.tt/3u6vkk4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*