திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையில், சார்பு ஆய்வாளர் ஷேகப்துல்லா தலைமையிலான போலீஸார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வத்தலக்குண்டு நோக்கி வந்துகொண்டிருந்த காரை மறித்து சோதனை செய்ததில், காரில், கட்டுகட்டாக கருப்புக் காகிதங்கள் இருந்துள்ளது. காரை ஓட்டிவந்த நபரை விசாரிக்கவே, அவர், முண்ணுக்குப் பின் முரணாகப் பேசவே, சந்தேகமடைந்த போலீஸார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த நபர் பெயர் நல்லமலை (வயது48) என்பதும், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `நான் வைத்திருக்கும் கறுப்புக் காகிதத்தை, சிறப்பு பார்முலா மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தில் போட்டால், அந்தக் கருப்புக் காகிதம், ரூ.2000 நோட்டாக மாறும்’ என கூறியுள்ளார் நல்லமலை.
Also Read: `ஐயய்யோ... வரலாற்றுப் பிழை' - உளறிய எம்.எல்.ஏ-வை `அலர்ட்’ செய்த திண்டுக்கல் சீனிவாசன்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், நல்லமலையிடம் மேலும் விசாரித்துள்ளனர். `என்னிடம் வரும் நபர்களிடம், நான் ஏற்கனவே கருப்பு மை தடவி வைத்திருக்கும் சில ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை அவர்கள் முன், திரவத்தில் போட்டு காண்பிப்பேன். அந்த நோட்டுகளின் கருப்பு மை கரைந்து பளிச்சிடும். அதனை வைத்தே, வெற்றுக் கறுப்புக் காகிதத்தை அந்த நபர்களிடம் விற்றுவிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.
Also Read: என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
``யாரயோ ஏமாற்ற காரில் சென்றுகொண்டிருந்தார் நல்லமலை. வழியில் தான் எங்களிடம் மாட்டிகொண்டார். அவரின் கறுப்புக் காகிதம், திரவம், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நல்லமலையைக் கைது செய்திருக்கிறோம். அவர் மீது தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, நல்லமலை பற்றிய முழு தகவல்களையும் விசாரித்துவருகிறோம். இது போன்ற மோசடி நபர்களிடம் சிக்கி மக்கள் தங்களது பணத்தை இழக்க வேண்டாம்” என்றனர் வத்தலக்குண்டு போலீஸார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jXO6Fi
via
