கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமாமர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. வசந்த குமார் கடந்த 2019 தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் தனது சொத்துமதிப்பு 417 கோடி என குறிப்பிட்டிருந்தார். வசந்தகுமார் தனது மொத்த சொத்து மதிப்பு 417,49,30,444 ரூபாய் எனவும், 154,75,11,439 ரூபாய் வங்கிக்கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தின் சொத்து மதிப்பு விபரங்களை தனது வேட்புமனுத்தாக்கலின் போது குறிப்பிடிருக்கிறார்.
அதில், வசந்த் & கோ நிறுவனத்தில் 25 சதவீதம் ஷேர் இருப்பதாக விஜய் வசந்த் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விவசாய நிலங்கள் போன்ற அசையா சொத்துக்களும், கார் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் விஜய் வசந்த். அத்துடன் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் உள்ள சொத்து மதிப்புக்களையும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி விஜய் வசந்துக்கு 40,44,93,256 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் 60,37,460 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், மகன் பெயரில் 7,54,333 ரூபாய் மதிப்பிலும், மகள் பெயரில் 6,10,928 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் வசந்த் மனைவியிடம் 160 சவரன் தங்க நகைகள் இருப்பதாகவும், அதன் மதிப்பு 55,42,400 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் வசந்த் பெயரில் 11,83,80,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் இருபது லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வசந்த், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 53,22,75,977 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/38ZIbvg
via
