ஓர் ஆண்டாகவே வீட்டுக்குள் முடக்கம்... `ரேணிகுண்டா', `பில்லா 2' பட நடிகர் `தீப்பெட்டி' கணேசன் மரணம்!

0

'ரேணிகுண்டா' மற்றும் 'பில்லா 2' படங்களின் மூலம் புகழ்பெற்றவர் 'தீப்பெட்டி' கணேசன். இவர் கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்திருந்தார். இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த கணேசனின் நிலைமை கடந்தவாரம் மிக மோசமானது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாடலாசிரியர் சினேகன்

சென்னை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கணேசன் இன்று உயிர் இழந்தார். கணேசனின் நெருங்கிய நண்பர் அம்பானி சங்கரிடம் பேசினோம். '' கணேசனின் இறப்பு அதிர்ச்சியாக உள்ளது. அவரின் இரண்டு மகன்களின் நிலைமையை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. 'கண்ணே கலைமானே' பட ஷூட்டிங்கின் போதுதான் கணேசன் நல்ல பழக்கம். நாற்பது நாள் வரைக்கும் ஒன்றாக வேலைசெய்தோம். கடந்த ஓர் ஆண்டாகவே அவர் மிகவும் சிரமப்பட்டார். நடக்கமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிவிட்டார் '' என்றார்.

லாக்டெளன் காலத்தில் கணேசனின் உடல்நிலையை அறிந்து பாடலாசிரியர் சினேகன், அவருக்கு பொருளாதார உதவிகள் செய்ததோடு, மகன்களின் கல்வி செலவையும் தான் ஏற்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



from தமிழ் சினிமா https://ift.tt/3cS4XXb
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*