கரூர்: 'மணல்' பேச்சு; செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

0

மாட்டு வண்டியில் மணல் எடுப்பது குறித்து தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, பிரசாரத்தின் போது பகிரங்கமாக ஆதரித்து பேசிய பேச்சு, சர்ச்சையானது. இந்த நிலையில், மணல் அள்ளுவதை ஆதரித்துப் பேசிய செந்தில் பாலாஜியின் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி பிரசார நிகழ்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பிரசாரத்தில் ஈடுப்பட்டபோது பேசிய செந்தில் பாலாஜி, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது" என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் பலரும், 'மணல் கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் பேசுகிறார்' என்று அவருக்கு எதிராக கடும் விமர்சனம் செய்தனர். அதோடு, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அமைச்சர் ஜெயகுமாரும், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள விஷயம். இது சட்டத்துக்கு புறம்பானது என்று எங்கும் குறிப்பிடபடவில்லை. லாரிகளில் மணல் எடுப்பது தான் தவறு. மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கோர்ட்டில் கேஸ் போட்டனர். அவர்களுக்கு சார்பாக தீர்ப்பும் வந்தது. தமிழக அரசு, ஐந்து இடங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க இடம் ஒதுக்குவதாக சொன்னது. ஆனால், இன்று வரை இடத்தை ஒதுக்கவில்லை. நான் பேசியது சட்டத்துக்கு உட்பட்டது தான்" என்று விளக்கம் அளித்தார்.

செந்தில் பாலாஜி

இதற்கிடையில், 'மணல் அள்ளுவதை வெளிப்படையாக ஆதரித்து பேசிய செந்தில் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அ.தி.மு.க கூட்டணி சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீது, கரூர் நகர காவல் நிலைய போலீஸார், ஐ.பி.சி 153, 189, 505 ( 1 ) (பி), 506 ( 1 ), 353, 511 ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cPtKLu
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*