கடலூர்: கொரோனா தடுப்பூசி என்று கூறி மயக்க ஊசி போட்டு நகைகள் கொள்ளை! - இளம்பெண் கைது

0

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்திருக்கும் லக்கூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராசாத்தி. பெரம்பலூர் மாவட்டம், கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா. பெரம்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வரும் சத்தியப்பிரியா ராசாத்தியின் சொந்த அத்தை மகள். கடந்த 11-ம் தேதி மாலை 3 மணியளவில் லக்கூரில் உள்ள ராசாத்தி வீட்டிற்கு சென்றிருக்கிறார் சத்தியப்பிரியா.

சத்தியப்பிரியா

அப்போது அவர்களிடம், ‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றவே கொரோனா தடுப்பூசி எடுத்து வந்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் சத்தியப்பிரியா. அவர்களும் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவிக்க, அன்று இரவு ராசாத்தி, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, மகள்கள் கீர்த்திகா, மோனிகா ஆகிய 4 பேருக்கும் ஊசியை போட்டுள்ளார்.

அதையடுத்து 4 பேரும் அன்றிரவு அயர்ந்து தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது சத்தியப்பிரியா இல்லாததுடன், ராசாத்தியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயின், மகள் கிருத்திகா அணிந்திருந்த 10 பவுன் தாலிச் செயின், 1 பவுன் செயின், மோனிகா அணிந்திருந்த 2 பவுன் செயின் உள்ளிட்ட 19 பவுன் நகைகளும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Also Read: `நாய்க்கு மயக்க மருந்து; ரூ.15 லட்சம், 130 சவரன் நகைகள்!' - கோவை கான்ட்ராக்டரை அதிரவைத்த கொள்ளை

அதையடுத்து ராமநத்தம் காவல் நிலையத்தில் ராசாத்தி அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியப்பிரியாவை வளைத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டது காவல்துறை. அப்போதுதான் கொரோனா தடுப்பூசி என்று கூறி அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு நகைகளை திருடியது தெரிய வந்தது. மருத்துவர்களும் அது மயக்க ஊசிதான் என்பதை உறுதிப்படுத்தினர். அதையடுத்து சத்தியபிரியா மீது வழக்கு பதிவு செய்ததுடன், அவரை கைது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tgOsuf
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*