''விரலோடு உயிர்கூட கோர்த்து...'' - விக்னேஷ் சிவன் - நயன்தாரா நிச்சயதார்த்தம் நடந்ததா?!

0

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது என்கிற செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப்புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா சாய்ந்திருக்க அவரது கைவிரலில் பிளாட்டினம் மோதிரம் மின்னுகிறது. போட்டோவின் கேப்ஷனாக ''விரலோடு உயிர்கூட கோர்த்து'' என பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இந்த போட்டோ காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திபரவிவருகின்றன.

இதுகுறித்து விக்னேஷ் - நயன்தாராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ''நயன்தாரா அணிந்திருக்கும் மோதிரம் பழைய மோதிரம்தான். நயன்தாரா நடிக்க 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கிவருகிறார் விக்னேஷ் சிவன். இதுத்தவிர நயன்தாராவுக்கு மலையாளத்தில் இரண்டு படங்கள் இருக்கின்றன. ராம் இயக்கத்திலும் தமிழில் இன்னொரு படம் நடிக்கயிருக்கிறார் நயன். இருவருமே கைகளில் பல ப்ராஜெக்ட்டுகளோடு இருக்கிறார்கள். அதனால் இப்போதைக்கு திருமணம் குறித்த செய்தி எதுவும் இல்லை'' என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/3vZ8gog
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*