கொரோனா பரவல்... லாக்டெளன் அச்சம்... கார்த்தியின் 'சுல்தான்' ரிலீஸ் ஆகுமா?!

0

ஏப்ரல் 2-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கார்த்தியின் 'சுல்தான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சுல்தான்'. இப்படம் ஏப்ரல் 2-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட அறிவிப்பு வெளியான சில நாட்கள் கழித்து தமிழகத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே ரிலீஸ் தேதியில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கொரோனா பரவல் 'சுல்தான்' தயாரிப்பாளர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சுல்தான்

கொரோனா பரவல் காரணமாக இரவு நேர லாக்டெளன் அறிவிக்கப்படலாம் என செய்திகள் பரவுவதோடு, குடும்பங்களும் தியேட்டர்களுக்கு வருவது குறைவது படக்குழுவை தீவிர யோசனையில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸை தள்ளிவைக்கும் முடிவில் தயாரிப்பு டீம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஹீரோ கார்த்தியும் "பட ரிலீஸுக்குப் பின் லாக்டெளன் வந்துவிட்டால் அது படத்தை மொத்தமாக பாதிக்கும் என்பதால் பொறுமை காக்கலாம்" என்கிறாராம். இதனால் 'சுல்தான்' படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

இப்போதைக்குப் பெரிய படமாக ஏப்ரல் 9-ம் தேதி தனுஷின் 'கர்ணன்' படம் மட்டுமே தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.



from தமிழ் சினிமா https://ift.tt/3tEo5OX
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*