சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திட தங்க பேனாவை நிர்வாகி ஒருவர் வழங்கியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட கட்சிகள் வேட்பாளருக்கான நேர்காணலை நடத்தியது. இதில் அ.தி.மு.க-வில் 8,000 பேர் விருப்ப மனு கொடுத்த நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் நேர்காணலை நடத்தி சாதனை படைத்தது. மேலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதேபோல் தி.மு.க-வில் விருப்ப மனு அளித்தவர்களில் 7,000 பேர் அழைக்கப்பட்ட நிலையில் இன்றுவரை நேர்காணல் நடந்தது. இதில் சீட் வாங்குவதற்கு சிலரும், இதன் மூலம் அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளம் போடவும், ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் ரூ. 25,000 பணம் செலுத்தி நேர்காணலுக்கு சென்று வந்துள்ளனர்.
இதில் தலைமையை கவர்ந்து சீட் பெறுவதற்காக ஸ்டாலின், உதயநிதி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் பலர் விருப்ப மனு அளித்திருந்தனர்.
ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற தலைவர்கள் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு விருப்ப மனு செய்த மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சையதுஜி என்பவர் நேர்காணலுக்கு செல்லும்போது தங்க பேனா ஒன்றை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.
"என்ன இது?" என்று ஸ்டாலின் ஆச்சரியமாக கேட்க, "நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்து இந்த தங்க பேனாவில் போட வேண்டும்" என்று கூற, ரொம்பவும் மகிழ்ச்சியாகியிருக்கிறார். அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் இக்காட்சியை வியப்பாக பார்த்துள்ளனர்.
"திமுக ஆட்சிக்கு வருவது உறுதி. சீட் கிடைக்கிறதோ இல்லையோ, தளபதி மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்து பேசி பேனா வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார் சையதுஜி.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3kPNT7A
via
