மாரியப்பனுக்கு 14 வயது ஆனபோது, அவருடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரை முத்து மீனாட்சியாக உணர வைத்தது.
அரசு நடனப் பள்ளியில் சேர்ந்து யோகா டிப்ளோமா முடித்த முத்து மீனாட்சி, பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார். விடாமுயற்சியின் பலனாக, அரியகுளம் சாரதா பள்ளி அவரை நடன ஆசிரியராக அங்கீகரித்தது.
முத்து மீனாட்சியின் நடனப் பள்ளியில இப்போது 45 குழந்தைகள் பரதம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். திருநங்கை அளிக்கும் நடனப் பயிற்சி எப்படி இருக்குமோ என்று ஆரம்பத்தி பிள்ளைகளை அனுப்ப பல பெற்றோர்கள் தயங்கினார்கள். ஆனால், இவருடைய திறமையையும் இவரிடம் நடனம் கற்றுக்கொண்ட மாணவர்களையும் பார்த்து, அவர்களாகவே தங்கள் பிள்ளைகள நடனம் கற்க அனுப்பி வைக்கிறார்கள்.
முத்துமீனாட்சி பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Opjil9
via
