தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் தங்கினார். இன்றைய காலை உணவை அங்கு முடித்த ஸ்டாலின், 10.45 மணிக்கு புறப்பட்டு, காந்திசிலை சந்திப்பில் எ.வ.வேலு உள்ளிட்ட 8 வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.
அருணை பொறியியல் கல்லூரியில் இருந்து ஸ்டாலின் வெளியேறும்வரை காத்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தனர். கல்லூரி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், ஸ்டாலின் தங்கியிருந்த அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சல்லடையாக சோதனையிட ஆரம்பித்தனர். ஸ்டாலின் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே ரெய்டு குறித்த தகவல் வெளியானதால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
Also Read: மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! - பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்...
அதேபோல், எ.வ.வேலுவின் திருவண்ணாமலை மற்றும் சென்னை வீடுகள், அவருக்கு சொந்தமான அறக்கட்டளை அலுவலகம், நண்பர்களின் வீடு என அனைத்து இடங்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rmjf7u
via
