"தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், தி.மு.க தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணி, தளபதி தலைமையில் அமோகமாக வெற்றிபெறும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலேயே, கரூர் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர், வீட்டுக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுக்க இருக்கிறதாக சொல்றாங்க. 100 பவுன் கொடுத்தாலும், அ.தி.மு.க கரூரில் ஜெயிக்காது" என்று செந்தில் பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Also Read: கரூர்: `அடுத்தவர் உழைப்பில் வளர்ந்த ஜெராக்ஸ் முதல்வர்!’ - செந்தில் பாலாஜி விமர்சனம்
கரூர் மண்மங்கலத்தில், கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். தொடர்ந்து, கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் தங்கவேல் நகரில், தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "அ.தி.மு.கவினர் வன்முறைக்கு தயாராகிட்டாங்க. எப்படி நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிகாரிகளின் துணையோடு வன்முறையில் இறங்கினார்களோ, அதேபோல் இப்பவும் வன்முறையில் இறங்கத் தயாராகிவிட்டாங்க. அதற்கு, இப்போதைய மாவட்ட ஆட்சியர் துணை போகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவரைவிட, 100 மடங்கு பொய் பேசக்கூடிய வல்லமை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் இப்போது கரூருக்கு வந்திருக்காங்க. அவங்கதான் மாவட்ட தேர்தல் அதிகாரி. ஏன்னா, பறக்கும் படைக்கு புகார் போகுது. அவங்க போய் ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பரிசுப் பொருள்களை கைபற்றுறாங்க. ஆனா, அந்த பறக்கும் படை அதிகாரிக்கு இந்த மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்புகிறார்.
ஆளுங்கட்சிக்கு அவங்க சாதகமா நடந்துக்கணும்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு கரூர்ல ஓட்டு இல்லை. அவங்க யாரையும் ஓட்டு போடுங்கனு சொல்ல முடியாது, அது வேற விசயம். இவங்க நினைக்கிறாங்க, தான் நினைச்சா கரூர் மாவட்டத்துல நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.கவை ஜெயிக்க வச்சுடலாம்னு. ஆனா, நீங்க நினைத்தால் மட்டுமல்ல, டெல்லி எஜமானர்கள் நினைத்தால் மட்டுமல்ல, வேறு யார் நினைத்தாலும் தி.மு.க வெற்றிப்பெறுவதை தடுக்க முடியாது.
234 தொகுதிகளிலும், தி.மு.க தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணி,வெற்றிபெறும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலேயே கரூர் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கரூர் தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சர், வீட்டுக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுக்க இருக்கிறதா சொல்றாங்க. 100 பவுன் கொடுத்தாலும், அ.தி.மு.க கரூரில் ஜெயிக்காது. தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை மண்ணைக் கவ்வ வைப்பார்கள்" என்றார்!.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2MWdPlz
via
