இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குப் போடப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் 45 முதல் 59 வயது வரையிலுள்ள நாள்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டு வருகிறது.
கோவாக்ஸின், கோவிஷீல்டு என இருவகையான தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் இந்த இரு தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக https://ift.tt/3s3Kuo9 இணையதளத்திலோ அல்லது ஆரோக்கிய சேது செயலியிலோ பதிவு செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான பதிவு நடைமுறைகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், பதிவு செய்யத் தெரியாவர்கள் அதற்கான வசதிகள் இல்லாத மக்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுசுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகத்திடம் பேசினோம், "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் கோ-வின் 2.0 தளத்திலோ அல்லது ஆரோக்கிய சேது போன்ற செயலிகள் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். இதில் தடுப்பூசி போடும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் விவரங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
அதில் தங்களுக்கு ஏதுவான இடத்தைத் தேர்வு செய்து அதற்கான நேரத்தை பதிவு செய்துகொள்ள முடியும். பதிவு செய்யத் தெரியாத அல்லது இயலாத நபர்கள் ஆதார் அட்டை அல்லது ஏதாவதோர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு நேரடியாக அவர்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களே பதிவு செய்து உங்களுக்கு போட்டுவிடுவார்கள். ஆகையால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை."என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/38fKCts
via
