Vikatan Exclusive : மோகன்லால் இயக்கும் மலையாளப்படத்தில் நடிக்கிறார் அஜித்... ஏன், எதற்கு?!

0

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிகராக உச்சத்தில் இருக்கும் மோன்லால் முதல்முறையாக இயக்குநர் ஆகிறார். 'பரோஸ் - நிதி காக்கும் பூதம்- 3டி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் மூலம் 15 வயதில் இசையமைப்பாளராகியிருக்கிறார் லிடியன். இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

'மை டியர் குட்டிச்சாத்தான்- 3டி' படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ்தான் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். முதலில் ஜிஜோ இயக்குவதாக இருந்த இப்படத்தை இயக்கும் பொறுப்பை இறுதியில் மோகன்லாலே ஏற்றிருக்கிறார். ஏராளமான வெளிநாட்டு நடிகர்கள் நடிக்கயிருக்கும் இப்படத்தில் முக்கியமான கேரெக்டரில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் நடிக்கிறார்.

பரோஸ்
பரோஸ் பட பூஜை
பரோஸ் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தோஷ் சிவன், மோகன்லால்

படத்தின் பூஜை கடந்தவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில், முதல்கட்ட ஷூட்டிங் நேற்று தொடங்கியது. அடுத்தமாதம் கோவாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில்தான் மிகப்பெரிய திருப்பமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.

மோகன்லால் விரும்பிக் கேட்டுக்கொண்டதால் நட்புக்காக இப்படத்தில் அஜித் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அஜித்தின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது, கேமியோ கதாபாத்திரமா அல்லது படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமா என்கிற விவரங்கள் விரைவில் இங்கே அப்டேட் செய்யப்படும்!



from தமிழ் சினிமா https://ift.tt/31qGnqT
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*