``ஏப்ரல் 6 வரை கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்!’’ - வழக்கறிஞர் மனு!

0

"தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பண பரிவர்த்தனை செயலிகளை வாக்குப்பதிவு நாள் வரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்" என தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்.

ராமசுப்ரமணியன்

இதுபற்றி வழக்கறிஞர் ராமசுப்பிரமணியனிடம் கேட்டபோது, ``தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 6-ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் .

ஆனால், மதுரை மாவட்டத்தில் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் கோவை வேலுமணி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் வருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பால் ஓட்டுக்கு பணத்தை நேரடியாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் கொடுக்க முயற்சிக்கலாம். குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் , அமேசான் பே, போன் பே, போன்ற அலைபேசி பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் கொடுக்க முயற்சிக்கலாம். அப்படி கொடுப்பதாக தகவலும் வருகிறது.

எனவே அலைபேசி செயலி மூலம் பண பரிவர்த்தனையை வருகின்ற ஏப்பரல் 6-ம் தேதிவரை உடனடியாக தடை செய்ய தமிழகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அனுப்பியிருக்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல்

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற வழக்கு தாக்கல் செய்வேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3wkj0h9
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*