ராணிப்பேட்டை: கைகோத்த இருதுருவங்கள்; முடிவுக்கு வந்த மோதல்! - அ.தி.மு.க வேட்பாளர் உற்சாகம்

0

ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க-வில் இருதுருவ அரசியல் துளிர்விட்டு வந்த நிலையில், அதற்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதியில் சீட் பெறுவதில் எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் சுமைதாங்கி ஏழுமலைக்கும், இப்போதைய வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கும் கடும் போட்டி நிலவியது. 2016 தேர்தலில், ஏழுமலைக்கு சீட் கொடுத்து தோல்வியைச் சந்தித்தால் எஸ்.எம்.சுகுமாரை இந்த முறை களமிறக்கியது அ.தி.மு.க தலைமை.

தக்காளி விற்பனை செய்த வேட்பாளர் சுகுமார்

சுகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழுமலையின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் பணிகளிலிருந்தும் அவர்கள் விலகியிருந்தனர். இந்த நிலையில், வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக திடீரென களத்தில் குதித்துள்ளார் சுமைதாங்கி ஏழுமலை. தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூக வாக்குகளை கவருவதில் பா.ம.க-வின் ஒத்துழைப்பு மட்டுமே இருந்துவந்தது.

அ.தி.மு.க நிர்வாகி சுமைதாங்கி ஏழுமலையும் வன்னியர் என்பதால் அவர் பின்னாலிருந்த அச்சமூக ஆதரவாளர்களும் இப்போது சுகுமாரை ஆதரித்துவருகிறார்கள். பிளவுப்பட்டிருந்த இருத்தரப்பு கோஷ்டிகளும் இணைந்துள்ளதையடுத்து பிரசாரமும் களைக்கட்டி வருகிறது. வேட்பாளர் சுகுமாருடன் சுமைதாங்கி ஏழுமலையும் கைகோத்து வலம் வருவதால் அ.தி.மு.க-வினர் உற்சாகமாக களப்பணியாற்றி வருகிறார்கள்.

ஏழுமலையுடன் வேட்பாளர் சுகுமார்

இதுகுறித்து, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ``ஏழுமலைக்கும், வேட்பாளர் சுகுமாருக்கும் எந்த விதமான மோதலும் இல்லை. தலைமை அறிவித்த முடிவை ஏழுமலை ஏற்றுக்கொண்டார். எங்களை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும். அதேபோல், சுகுமாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் ஏழுமலை தீவிரமாக இருக்கிறார். வேட்பாளர் சுகுமாருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது’’ என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cK8ub0
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*