மதுரை : பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம்!

0

இன்று மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கொல்கத்தாவிலிருந்து நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் மோடி, நேராக மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.

பிரதமர் மோடி

தமிழக பாரம்பரியப்படி வேட்டி சட்டை துண்டு அணிந்து அசத்தலாக வந்த மோடிக்கு கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

மீனாட்சியம்மன் கோயில் வரலாறு பற்றியும் அங்குள்ள சிற்பங்கள் சிலைகள் பற்றியும் பிரதமர் கேட்டு தெரிந்து கொண்டார்.

அரை மணி நேரத்துக்கு மேலாக கோயிலில் தரிசனம் செய்தவருக்கு மீனாட்சியம்மன் குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு கோயில் வளாகத்தை சுற்றி பார்த்தார். பொற்றாமரை குளத்தை வியந்து ரசித்தார்.

பிரதமர் மோடி

தரிசனத்தை முடித்துக் கொண்டு கோயிலிலிருந்து கிளம்பியவர் திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். நேரு, இந்திரா காந்திக்கு பிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த 3-வது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை பாண்டி கோயில் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தென்மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மீனாட்சியம்மன் கோயிலில் மோடி

பிரதமர் வருகையால் இரண்டு நாட்களும் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் மாற்றி விடப்பட்டதாலும் பொது மக்கள் பல மணி நேரம் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/31H0D84
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*