மருத்துவமனையில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்... கோவிட் நிமினோனியா அறிகுறி!

0

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சட்டமன்ற வாக்குப்பதிவிலும்  கொரோனாவால்   பாதிக்கப்பட்டிருந்தவர்கள்  தங்களுடைய வாக்கினை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திரையுலகை சேர்ந்த பலருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதை அவரவர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவருடைய 86-வது பிறந்தநாளுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராம

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு கோவிட் நிமோனியா இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உடல்நலம் குணமாகி விரைவில் வீடு திரும்ப அவரது குடும்பத்தினரும் திரையுலகினரும் பிரார்தித்து வருகின்றனர். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 75 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் 25 படங்களில் ரஜினிகாந்தை ஹீரோவாக நடித்திருக்கிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/2OwDFxt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*