இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகள் கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, தனியார் ஐ.டி.ஐ ஊழியரிடம் ரூ. 45,500 வரை மோசடி செய்த நபர் மீது, கரூர் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: கரூர்: முழு ஊரடங்கு; சுவரில் துளையிட்டு 142 மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக்கில் கைவரிசை
கரூர் மாவட்டம், கடவூர் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் உள்ள துரைசாமி ஐ.டி.ஐ கல்லூரியில் பயிற்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பணத்தேவை இருந்திருக்கிறது. அதற்காக, கடன் வாங்குவதற்கு நினைத்திருக்கிறார். இந்த நிலையில், முகநூல் வழியே, பஜாஜ் நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று தருவதாக ஒரு விளம்பரத்தை குமார் கண்டுள்ளார். உடனே, அதில் உள்ள செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். செல்போனில் மறுமுனையில் பேசிய நபர் தன்னை, 'அனுஷ்மன் சாகு' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, 'நான் கடன் பிரிவு மேலாளர்' என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். குமாரின் கடன் தேவையை புரிந்துகொண்ட அந்த நபர், நைச்சியமாக ஒரு லட்ச ரூபாய் தனிநபர் கடன் வழங்குவதற்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 2,500 அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பி குமார், அவரின் வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார். தொடர்ந்து, அந்த நபர் பணம் கேட்க கூகுள் பே மூலம் ரூ. 43 ஆயிரம் வரை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், கடன் தொகை வழங்கப்படாததால், சந்தேகமடைந்த குமார் பஜாஜ் தனிநபர் கடன் பிரிவில் உள்ளவரை தொடர்புகொண்டு கேட்டபோது, 'மேற்கூறிய நபர் கடன் பிரிவில் பணியாற்றவில்லை. நாங்கள் அதுபோல் விளம்பரம் செய்யவில்லை. எங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி, யாரோ உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்' என தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த குமார், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் பணியாற்றி இளைஞரை, மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளம் மூலமாக ஏமாற்றி, பணமோசடி செய்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3wjXGHz
via
