`ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது!' - கரூருக்காக இணையத்தில் நிதி திரட்டும் ஜோதிமணி எம்.பி

0

``தமிழகம் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பால் ஒருவர்கூட உயிரிழக்காமல் தடுக்கும் உன்னதப் பணிக்காக எனது ஒரு மாத சம்பளம் ரூ.1 லட்சத்தை வழங்குகிறேன். இதே நோக்கத்துக்காகத் தாங்களும் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்யுங்கள்'' என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

Also Read: `யாருக்காக என் அப்பா, அண்ணன் உயிரை விட்டாங்களோ, அவங்களே எனக்கு ஓட்டு போடல!' - அன்னலட்சுமி

கொரோனா பரவலின் வேகம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உயிர்பலிகளும் அதிகரிக்க, மக்கள் பயத்தில் உறைந்திருக்கிறார்கள். கொரோனா பரவலைத் தடுக்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் கொரோனா பாதிப்பால் ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்காக, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உயிர்காக்கும் வசதிகளைச் செய்ய ஏதுவாக, சமூக வலைதளங்கள் மூலமாக உதவியைக் கோரியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில்,

`தமிழகம் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், நம்மிடம் அதிக நேரம் இல்லை. இப்பொழுதே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், கொரொனாவை வெற்றிகொண்டு உயிரிழப்புகளைத் தடுக்க இயலும். மக்களின் உயிர்காக்க தாராளமாக நிதி உதவி செய்வீர். கரூர் தொகுதி அரசு மருத்துவமனைகளுக்காக 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். இது ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கான தேவையைக் குறைக்க உதவும்.

ஜோதிமணி

ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதிக் குறைவால், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஓர் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். உயிர்காக்கும் இந்த உன்னதப் பணிக்காக என் ஒரு மாத ஊதியம் ரூபாய் ஒரு லட்சத்தை அளிக்கிறேன். தாங்களும் தங்களால் இயன்ற அளவு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஓர் உயிர்காக்க உதவும். நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.

நிதி உதவி அளிக்க: https://milaap.org/fundraisers/support-constituents-of-karur-loksabha-constituency '' என்று குறிப்பிட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tzUENV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*