`கோடியில் வருமானம் கொடுக்குமா செஞ்சந்தனம் சாகுபடி?' - விடையளிக்கும் ஆன்லைன் பயிற்சி

0

பணப்பயிர் வரிசையில் இன்றைக்கு வனப்பயிர்களும் இணைந்திருக்கின்றன. அதிலும் சந்தனம், செஞ்சந்தனம் குறித்த ஆர்வம் அதிகமானவர்களிடம் இருக்கிறது. இவை இரண்டும் நீண்டகால பயிர்கள் என்றாலும் பலர் விரும்பிப் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால், இன்னும் பலர் ஆர்வம் இருந்தும் நடவு செய்ய யோசித்து வருகிறார்கள். காரணம் இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்தான்.

பயிற்சி

குறிப்பாகச் செஞ்சந்தனம் சாகுபடி குறித்து பெரும்பாலானோர் இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். சந்தனம், செஞ்சந்தனம் உள்ளிட்ட உயர் மதிப்பு மரங்கள்குறித்த ஆராய்ச்சிகளைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

இந்நிலையில், உயர் மதிப்பு ரக மரங்கள் சாகுபடியில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன? சந்தனம், செஞ்சந்தனம் போன்ற மரங்களை நடவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், அவற்றிற்கான சந்தை வாய்ப்பு போன்ற பல்வேறு தகவல்களை விகடன் வாசகர்களுக்கு வழங்கவுள்ளோம். அதனடிப்படையில், பசுமை விகடன் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு இணைந்து `உயர் மதிப்பு மரங்களும்...உன்னத சாகுபடி முறைகளும்' என்ற தலைப்பில் ஒரு நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

17.05.2021 அன்று மாலை 5 மணி முதல் 7 மணிவரை நடைபெறும் நேரலை நிகழ்ச்சியில் வனக்கல்லூரியின் மரச்சாகுபடி துறைத்தலைவரும் பேராசிரியருமான முனைவர் பாலசுப்பிரமணியன் கலந்துரையாட இருக்கிறார். சந்தனம், செஞ்சந்தனம் ஆகிய மர வகைகள் மிகவும் மெதுவான வளர்ச்சியுடையவை. ஆனால், அந்த மரங்களையும் சற்று விரைவாக வளர்க்க முடியும். அதற்கான வழிமுறைகள் சொல்ல இருக்கிறார் பேராசிரியர். மேலும், சந்தனம், செஞ்சந்தனம் தொடர்பான உங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கும் விடையளிக்க இருக்கிறார்.

பாலசுப்பிரமணியன்

இது, அனைவரும் சந்தனம், செஞ்சந்தனம் வளருங்கள் என ஊக்கப்படும் நிகழ்ச்சி அல்ல. ஏற்கெனவே மேற்கண்ட மர வகைகளைச் சாகுபடி செய்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், இனி நடவு செய்யப்போகிறவர்கள் நடவுக்கு முன்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: https://bit.ly/2SMkxNH



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QlvvsF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*