'சென்னையில் தொடங்கியது மழை; எத்தனை நாள் நீடிக்கும்- வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் சொல்வதென்ன? '

0

கொரோனா காரணமாக தமிழகம் முழுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் சென்னையில் சற்று அதிகம் உள்ளதால் மக்கள் மருத்துவமனைகளில் படுக்கைகள் தேடியும், சிலர் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யவும் என சென்னையின் மருத்துவமனைகல் முழுக்கவே நிரம்பியிருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே டவ் தே புயல் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை, புயல் என இயற்கை சீற்றம் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை கடந்த வாரங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தற்போது சென்னையிலும் வானம் இருட்டி காணப்படுகிறது. பல இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது . டவ் தே புயல் காரணமாக இது ஏற்பட்டதா, எவ்வளவு நாள் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசனிடம் பேசினோம்,

"இந்த மழைக்கு வெப்பச்சலனம்தான் காராணம். 20-ம் தேதி (இன்று) சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழை
மழை
மழை
மழை
மழை

21.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

22.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

23 மற்றும் 24-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 24-ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 26-ம் தேதி ஒரிசா கடற்கரைக்கும் மேற்கு வங்க மேற்குவங்க கடற்கரைக்கும் இடையே கரையை கடக்க கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு வரும் 22-ம் தேதி முதல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Sd5ADP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*