வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள்: பயிற்சி மருத்துவராக சேர்க்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

0

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

கொரோனா வைரஸ்

அத்துடன், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் குறைவாக இருப்பதால் மருத்துவம் பார்ப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லாதது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களை இந்தியாவில் பயிற்சி டாக்டர்களாக பணியமர்த்த வேண்டும் என்று வாசுதேவநல்லூர் தொகுதியின் ம.தி.மு.க எம்.எல்.ஏ-வான டாக்டர். சதன் திருமலைக்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ

இது தொடர்பாக அவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஒன்பதாவது பருவத் தேர்வை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த அவர்களால் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் வெளிநாடு செல்ல இயலவில்லை. அதனால் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று தேர்வையும் எழுதி முடித்து விட்டார்கள். மத்திய அரசு நடத்தும் தகுதித் தேர்வை எழுதி தேர்வாகி விட்டனர்.

Also Read: `நீங்க மட்டும் இல்லைன்னா..!' - செவிலியர்கள் காலில் விழுந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்

தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மத்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வை எழுத கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாததால் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் விண்ணப்பித்து மத்திய அரசின் தகுதித் தேர்வை எழுதினார்கள்.

தகுதித் தேர்வு எழுதிய 21,000 பேரில் 2,722 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலங்களில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த 200 மாணவ மாணவிகள் மட்டும் தேர்ச்சி பெற்ற பின்னரும் பயிற்சி டாக்டர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

பயிற்சி மருத்துவர்கள்

அதனால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மத்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், கொரோனா பணியை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தமிழக அரசு அவர்களின் எதிர்கால நலனைக் கவனத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3blvOuG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*