தஞ்சாவூர் :'கொரோனா வார்டுகாக தனது சொகுசு பேருந்தை வழங்கிய 'டிராவல்ஸ்' உரிமையாளர்!'

0

கும்பகோணத்தில் 'ரதிமீனா டிராவல்ஸ்' என்ற பெயரில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்கி வருபவர் பி.ஏ.சேகர்.லாரி பார்சல் சர்வீஸையும் நடத்தி வருகிறார். இவர்களிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.இதையடுத்து ஆக்சிஜன் மற்றும் நார்மல் பெட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் சிகிச்சைக்கு சேர்வதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூல்நிலை நிலவியது.

கொரோனா தடுப்பு பணிக்காக கொடுக்கப்பட்ட பேருந்து

கொரோனா குறித்த பல்வேறு தடுப்பு பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.இக்கட்டான இந்த சூழ் நிலையில் தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளர் சேகர் படுக்கை வசதி கொண்ட தனது ஒரு பேருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்காக கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து சேகரிடம் பேசினோம்,"கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பெட்டுகளுக்கு பற்றாக்குறை நிலவும் நிலை இருப்பதாக அறிந்தேன்.இதனை போக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. நான் எங்க நிறுவனத்திற்கு சொந்தமான படுக்கை வசதி கொண்ட பேருந்தை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தி கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கிறோம்."

பேருந்துக்குள் கலெக்டர்

அந்த பேருந்தில் ஆக்சிஜன் வசதியினை ஏற்படுத்தி 10 படுக்கைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பட்டை கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவில் செயல்முறை படுத்தப்பட்டுவருகிறது.கலெக்டர் சாரிடம் மேலும் பேருந்துகள் தேவை என்றால் சொல்லுங்கள் தருகிறோம் எனவும் கூறினோம். இதைகேட்ட கலெக்டர் கோவிந்தராவ் எங்களை பாராட்டியதுடன் இதனை நடைமுறைப் படுத்தி பார்த்த பிறகு பெற்று கொள்கிறோம் எனவும் கூறியிருக்கிறார்.

அரசு விருப்பப்பட்டால் பல அரசு மருத்துவமனைகளுக்கு எங்களிடம் உள்ள பேருந்தை கொரோனா தொற்றின் தீவிரம் குறையும் வரை பயன்படுத்தி கொள்ள தருவதற்கு தயாராக இருக்கிறோம்.துயரமான இந்த சூழலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் அதற்காக என்னால் முடிந்த உதவியை செய்ய நெனச்சு எங்களோட பஸ்ஸை கொடுத்துள்ளேன் என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/34fhQqq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*