கொரோனா வைரஸ் பாதிப்பில் சென்னையை முந்திய கோவை - இந்த நிலைவரக் காரணம் யார்?

0

கொரோனா வைரஸ் முதல் அலை காலகட்டம், தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் தான் அதிக பாதிப்பை சந்தித்திருந்தது. ஆனாலும், கொரோனா வைரஸை வேகமாக கடுப்படுத்தி முன்மாதிரி மாவட்டமாக இருந்தது கோவை. கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சென்னையை முந்தி பாதிப்பில் முதல் இடத்தை பிடித்துள்ளது கோவை.

கோவை

சுகாதாரத்துறை அறிக்கைபடி, சென்னையில் நேற்று 3,561 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4,268 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா பாதிப்பு: சென்னையை விஞ்சும் நிலையில் கோவை!

``இரண்டாவது அலை தொடக்கத்தில் சென்னைக்கு அடுத்தநிலையில்தான் கோவை இருந்தது. அப்போது இங்கு பாதிப்பு சற்று குறைவு. அந்த நேரத்திலேயே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு சென்றிருக்காது. இப்போது எந்த நேரமும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு விசாரணை, மின் மயானங்களுக்கு விசாரணை என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

கோவை கொரோனா

இரண்டாவது அலையை அறிவியல் பூர்வமாக கணிக்கத் தவறியதே இப்போதைய நிலைக்குக் காரணம். ஆட்சியில் இருந்தபோது ஆக்டிவாக இருந்த அ.தி.மு.க-வினர் அதன்பிறகு `கண்டா வரச் சொல்லுங்க' என்றளவுக்கு முடங்கிவிட்டனர்.

ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எம்.எல்.ஏ-வாக அ.தி.மு.கவினர் இந்த காலகட்டத்தில் ஆக்கபூர்வமாக செயல்படவில்லை. கோவை மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்யும் மக்கள் பிரதிநிதிகள் தி.மு.கவில் யாரும் இல்லை. ஆட்சி மற்றும் கட்சி பொறுப்பில் உள்ள தி.மு.கவினர் பிரச்னையை சரியாக புரிந்து கொள்வதில்லை.

கோவை

இதனால் ஆக்ஸிஜன் தொடங்கி தடுப்பூசி விவகாரம் வரை பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இதில் பாதிக்கப்படுவது என்னவோ? கோவை மக்கள்தான். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது,``மற்ற பகுதிகளைவிட கோவை மண்டலத்தில் கொரொனாவின் தாக்கம் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. கோவை மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்களுக்கு மருத்துவ தலைநகராகவும் கோவை இருக்கிறது. இதனாலும், இங்கு பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனை

மேற்கு மண்டலம் முழுவதுமே பாதிப்பு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையில் இருந்து சிறப்பு அதிகாரிகள் கோவை வந்துள்ளனர். அவர்களுடன் ஆலோசித்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என்றனர்.

கட்சிபேதமின்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், மக்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2SvccxF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*