மதுரை:``கொரோனா மரண எண்ணிக்கையில் அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும்" - ஆர்.பி.உதயகுமார்!

0

திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஏற்கெனவே கொரோனா முதல் அலையின்போது அ.தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. தற்போது ஒரு கோடி ரூபாய் நிதியும், அ.தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளமும் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் மக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா உதவி வழங்கும் ஆர்.பி.உதயகுமார்

இரண்டாம் அலையில் தமிழகத்தில் அதிகமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தடுப்பு மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்த ஒரே நாளில் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை பிரதமர் உயர்த்தி கொடுத்தார். இதன் மூலம் மக்கள் நலனைக் காப்பதில் எடப்பாடி பழனிசாமி முதன்மையாக திகழ்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அசாதாரண சூழ்நிலை உருவாகி ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் அங்கு இரண்டு ஆக்ஸிஜன் கொள்கலன்கள் நிறுவப்பட்டன. இதில் 10,800 லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: மதுரை : தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி அனுப்பிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி....!

மக்களின் உயிரைக் காக்கும் ஆக்ஸிஜன் இருப்பை மாவட்ட நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததால் நேற்று காலை 11.30 மணி முதல் 4.30 மணி வரை ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 124 பேர் பலியானதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு அதிக கவனத்தை செலுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

ஆர்.பி.உதயகுமார்

கொரோனா மரணங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே அரசு வெளிப்படைத்தன்மையையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

முன் களப்பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்கி அவர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yne5Nh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*