கரூர்: 'தளபதி கிச்சன்; மூன்று வேளை இலவச உணவு!'- தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

0

கரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, கரூரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், ஏழைகளுக்கு, 'தளபதி கிச்சன்' என்ற பெயரில், மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

உணவு வழங்கும் செந்தில் பாலாஜி

Also Read: ஸ்டாலின் பதவியேற்ற 5-வது நிமிடம்... செந்தில் பாலாஜி சொன்னது நடக்கக் கூடாது- பதறும் இயற்கை ஆர்வலர்கள்

சட்டபேரவை உறுப்பினராக பதவியேற்பு மற்றும் சட்டப்பேரவை கூட்டம் என்று பல்வேறு நிகழ்வுகளுக்காக தொடர்ந்து சென்னையில் முகாமிட்டிருந்த செந்தில் பாலாஜி, இன்று காலை கரூர் வருகை தந்தார். அப்போது, அவர் கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள சீரமைக்கப்பட்ட கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இன்று காலை பார்வையிட்டார். அங்கே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தளபதி கிச்சனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் கலந்துகொண்டு, ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம்,

உணவு வழங்கும் செந்தில் பாலாஜி

"கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10 - ம் தேதியில் இருந்து வரும் 24 - ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள், வயதானவர்கள், உணவுக்கு வழியில்லாதவர்களுக்காக கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் 'தளபதி கிச்சன்' உருவாக்கப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் தடையின்றி ஏழை, எளிய, வயதான, அடித்தட்டு மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழை எளிய மக்கள் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பாசியாற்றிக்கொள்ளலாம். கரூர் நகரில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்" என்றார்.தொடர்ந்து, கரூர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்களை குறித்த ஆய்வுக் கூட்டங்களில் பெங்கெடுத்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில், மூன்று வேளைகளும் உணவு வழங்கும் செந்தில் பாலாஜியின் இந்த முயற்சி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/33DZ9fw
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*