கோவை:`நாங்கதான் தடுப்பூசிக்கு டோக்கன் கொடுப்போம்' - திமுக-வினர் அட்ராசிட்டி; மக்கள் அவதி

0

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசி பற்றாக்குறை கோவை மக்களை வாட்டி வதைக்கிறது.

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்போதுவரை பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடந்த இரண்டு நாள்களாக போதிய கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்தது.

Also Read: FactCheck: `முதல்வர் ஆய்வு செய்த கோவை மருத்துவமனையின் தற்போதைய நிலை' -பரவும் செல்ஃபியும் உண்மையும்

இந்நிலையில், இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கோவை குறிச்சி பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நடைபெற்றது. அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மருத்துவர் முகுந்தன்

அப்போது அங்கு வந்த தி.மு.கவினர், ``தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை நாங்கள்தான் விநியோகம் செய்வோம்” என்று கூறி மருத்துவ குழுவினரிடமும், மருத்துவர் முகுந்தன் என்பவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read: Covid Questions: அலர்ஜி உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் தி.மு.க-வினரை வெளியேற்றினர். இதேபோல வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த தி.மு.க சரவணம்பட்டி பொறுப்பாளர் அருள்குமார், ``தடுப்பூசிக்கான டோக்கனை நான்தான் கொடுப்பேன். யார்கிட்ட வேணும்னாலும் புகார் கொடுத்துக்கோங்க. எனக்கு பயமில்லை” என்று கூறினார்.

தி.மு.கவினர் வாக்குவாதம்

இதனால், தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல, கோவையின் சில பகுதிகளில் தி.மு.க-வினர், நாங்கள்தான் டோக்கன் கொடுப்போம் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டதற்கு , ``போலீஸாருடன் இணைந்து தடுப்பூசி மையங்களில் போதிய பாதுகாப்பு கொடுப்போம்” என்று மட்டும் கூறினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uQpsua
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*