நாமக்கல்: 100 அடியில் பிரமாண்ட மண் சிலை; பக்தர்களைப் பரவசப்படுத்திய `துரியோதனன் வதம்' நிகழ்ச்சி!

0
பரமத்திவேலூரில் ஆடிமாதத்தில் நடக்கும் மகாபாரதக் கதையில் வரும் துரியோதனையை வீழ்த்தும் நிகழ்ச்சியையும், பாஞ்சாலி சபதத்தையும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Also Read: ``அண்ணனா நெனச்சுகோங்க; ஏதாச்சும் தேவைன்னா போன் பண்ணுங்க!" - இளம்பெண்ணிற்கு உதவிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் பஞ்சபாண்டவர் கதையான மகாபாரதக் கதை நிகழ்த்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 46 வருடங்களாக இந்த மகாபாரத கதை நிகழ்த்தல் நடைப்பெற்று வருகிறது. இதனையொட்டி, 47வது ஆண்டாக இந்த ஆடிமாதம் முதல் தேதியிலிருந்து ஆடி 18-ம் தேதி வரை நிகழ்த்தப்பட்ட மகாபாரதக்கதையில் துரியோதனனை வீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக, 100 அடியில் பிரமாண்ட துரியோதனன் சிலை மண்ணினால் செய்யப்பட்டது.

துரியோதனன் வதம்

வீமன் துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொன்றுவிடுவான். பின்னர் பாஞ்சாலி, அவனது ரத்தத்தை எடுத்துத் தலையில் தடவி கூந்தலை முடிந்து, பாஞ்சாலி சபதத்தை முடிப்பாள் என இக்கதை முடிகிறது. இந்த மகாபாரத கதை அங்கே தத்ரூபமாக நடத்திக்காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "மாதம் மும்மாரி மழை பெய்து, விவசாயம் செழிப்படையவும், நாணயமும், பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படுவதற்காகவும், தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தவும் மகாபாரதக்கதை நிகழ்த்தப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rQUUJ7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*