அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு!

0

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலுமணி

தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VHxtpk
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*