ஒரு மீன் ₹20,000; ஏலத்தில் எடுத்து ஆச்சர்யப்படுத்திய மீனவப் பெண்!

0

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் கிடைக்கக் கூடிய `புலாசா’ என்ற அறிய வகை மீன் அங்கு மிகவும் பிரபலம். கோதாவரி ஆற்றில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மீனுக்கு அங்கு கிராக்கி அதிகம். `புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி’ என்பது ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற பழமொழிகளில் ஒன்று.

புலாசா மீன்

Also Read: 1 டன் மீன், 200 கி இறால், 10 ஆடு, 1000 கி காய்கறி; வண்டி வண்டியாக சீர் அனுப்பிய ஆந்திர மாமனார்!

அதாவது தாலியை விற்றாவது புலாசா மீனை வாங்கி தின்றுவிடு என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம். அந்த அளவுக்கு ஆந்திர மக்களின் உணவில் இந்த மீன் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆந்திர மக்கள் விரும்பி உண்ணும் இந்த மீன் எப்போதாவதுதான் மீனவர்களில் வலைகளில் சிக்கும். கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றுக்கு விலை நிர்ணயிக்கப்படும்.

வலைகளில் `புலாசா’ மீன் சிக்கிவிட்டதென்று தெரிந்தால் அரசியல்வாதிகள் முதல் முன்னணி சினிமா நடிகர், நடிகைகள் என அனைவரும் அதனை ஏலத்தில் எடுக்க குவிந்துவிடுவார்கள். ஆந்திரா மாநிலத்தின் சந்தைகளில் மட்டுமே இந்த மீன் கிடைக்குமென்பதால் அம்மாநில மக்கள் மட்டுமல்ல கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புலாசா மீனை வாங்க ஆந்திராவை நோக்கி படையெடுப்பார்கள்.

புலாசா மீன்

புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் பகுதி ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. நேற்று முன் தினம் ஏனாம் ஆற்றில் சிக்கிய ஒரு புலாசா மீன் ஏலத்தில் விடப்பட்டது. 2.5 கிலோ எடையுள்ள அந்த மீனை அதே பகுதியைச் சேர்ந்த பார்வதி என்ற மீனவப் பெண் 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Wbp2mP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*