மதுரை: 293-வது ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார்!

0
திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

292-வது பீடாதிபதியாக இருந்துவந்த அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 13-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

ஆதீனம் மறைந்து 10-வது நாளான இன்று அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் காலை குருபூஜை நடந்தது.

அருணகிரிநாதர் காலமான அன்றே தருமபுர ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293-ஆவது மதுரை ஆதினமாக ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் புதிய ஆதினமாக நியமனம் செய்யப்பட்டார்.

புதிய ஆதீனம்

இந்நிலையில் 10 நாள்கள் குருபூஜைகள் முடிவுற்ற நிலையில், இன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களின் முன்னிலையில் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 293-வது ஆதினமாக அதிகாரப்பூர்வமாக பீடத்தில் அமரும் ஞானபீடாரோஹன நிகழ்வு நடந்தது.

பொறுப்பேற்கும் ஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் இயற்பெயர் பகவதிலட்சுமணன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த காந்திமதிநாதன் - திருமதி ஜானகி தம்பதியினருக்கு 25.03.1954 மகனாக பிறந்தார்.

21 வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத்தம்பிரானாகவும், 1976-ம் ஆண்டு முதல் 1980 வரை தருமையாதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019- ம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தித் தம்பிரானாக 39 ஆண்டுகள் பணியாற்றிவந்தார்.

293-வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்

மதுரை ஆதீனத்தில் கடந்த 6.6.2019 அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டார்.

இன்று முதல் மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக முறைப்படி பொறுப்புக்கு வந்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2WgC5Dg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*