கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வணிகவரித்துறை ஆணையருமான சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு தரப்பு மக்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Also Read: கொரோனா தளர்வுகள் : `கோவை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?'
அப்போது பேசிய அவர், ``கோவை மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 200 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகிறது. கோவை மக்களுக்கு 43% கொரோனா எதிர்ப்பு சக்தி (seroprevalence) இருக்கிறது. அதுவே சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி 78% ஆக உள்ளது. சென்னையை போல மற்ற மாவட்டங்களிலும் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உள்ளது.
ஆனால், மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் அது குறைவாக உள்ளது. இதனால், கோவையில் மூன்றாவது அலை பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோவை மூன்றாவது அலைக்குத் தயாராவது முக்கியம். கடந்த அலையைப் பொறுத்தவரை கோவையில் 200 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,000 என்ற பாதிப்பு நிலையை அடைய ஒரு மாதம் ஆனது.
அதுவே 2,000 என்ற பாதிப்பு நிலையில் இருந்து 4,000 என்ற எண்ணிக்கையை தொட மூன்று வாரங்களே ஆனது. அதேநிலை இந்த முறை வரவும் வாய்ப்புள்ளது. ஒரு மாதத்துக்குள் கூட மூன்றாவது அலை வரலாம்.
எல்லோரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மக்கள் இதைச் சரியாகக் கடைப்பிடித்தால் முழு ஊரடங்கை தவிர்க்க முடியும். கோவைக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
Also Read: கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்!
ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளது. இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3izeM07
via
