`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் கைது!’ – சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட டி.ஜி.பி!

0

புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதியில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இளம்பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவர்மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார் அவரது கணவர். இதனை சகித்துக்கொள்ள முடியாத அவர், வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ‘தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும்படியும் அழுதிருக்கிறார்.

புதுச்சேரி போலீஸ்

ஆனால் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டதால் செய்வதறியாமல் வீடு திரும்பியிருக்கிறார் வசந்தி. அதன்பிறகு லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அவர் புகார் அளிக்க சென்றபோது அங்கு பணியிலிருந்த தலைமைக் காவலர் சண்முகம், அந்தப் பெண்ணை அமர வைத்துக்கொண்டு அனைத்து காவலர்களையும் மதிய சாப்பாட்டிற்கு செல்லும்படி உத்தரவிட்டதுடன் வசந்தியிடம், ‘உனது கணவரை விவாகரத்து செய்ய நான் உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ என்ன செய்வாய் ?

ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா ?’ என்று கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் 12-ம் தேதி நமது விகடன் இணையத்தள பக்கத்தில் விரிவாகவும் எக்ஸ்ளூசிவாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதையடுத்து இறைவி பெண்கள் அமைப்பின் மூலம் லாஸ்பேட்டை காவல் நிலையம் சென்ற வசந்தி, புகாரளிக்கச் சென்ற தன்னிடம் பணியில் இருந்த தலைமைக் காவலர் சண்முகம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Also Read: `இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த காவலர் மீது வழக்கு பதிவு!’ - அதிரடிகாட்டிய புதுச்சேரி போலீஸ்

அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உதவி செய்த இறைவி அமைப்பின் தலைவி இருவரையும் கடுமையாக விமர்சித்து தனது செல்போன் எண்ணில் இருந்தே வாட்ஸ்-அப் குழுக்களில் பதிவு செய்திருந்தார் காவலர் சண்முகம். அந்த விவகாரம் குறித்தும் எஸ்.பி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளுக்கு இறைவி அமைப்பின் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று காலை அவரை கைது செய்தனர் லாஸ்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள். தொடர்ந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார் புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி கிருஷ்ணய்யா.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z7UYGY
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*