கோவில்பட்டி: விபரீத முடிவெடுத்த மனைவி; கைது செய்யப்பட்ட கணவன்; வயது வித்தியாசம்தான் காரணமா?!

0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 24). இவர், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில டிரைவராகப் பணியாற்றி வந்துள்ளார். கணபதி, இதற்கு முன்பு கடலையூரில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த கடலையூரைச் சேர்ந்த அஞ்சலி ( வயது 26) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ( இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது )

உயிரிழந்த தம்பதி

இவர்களின் காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரியவர, அஞ்சலியைவிட கணபதி இரண்டு வயது இளையவர் என்பதால், வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி கண்டித்துள்ளனர். ஆனால், இருவரும் வீட்டின் எதிர்ப்பினை மீறி, வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஆண்டு திருமணம் செய்து, திப்பனூத்துவில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, வாழ்ந்து வந்துள்ளனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், நாட்கள் செல்லச்செல்ல இருவரையும் ஏற்றுக் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு எழத் தொடங்கியுள்ளது.

இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தினைச் சொல்லி அக்கம் பக்கத்தினர் கிண்டல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, வயது வித்தியாசத்தால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை வருவதும் அருகில் உள்ளவர்கள், இருவரையும் சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்தது வந்துள்ளது. இதற்கிடையில்தான் அதிக சித்திரவதை சந்தித்து வருவதாகத் தனது தாய் மாடத்தியிடம் செல்போனில் அஞ்சலி கூறினாராம். கடலையூரில் உள்ள தங்களுக்குச் சொந்தமான வீட்டில் இருவரும் வசிக்கலாம் என மாடத்தி கூறினாராம்.

திப்பனூத்துவில் உள்ள கணபதி வீடு

இதுகுறித்து அஞ்சலி தனது கணவனிடம் சொல்ல, இருவருக்கும் இது சம்மந்தமான பிரச்னை எழுந்ததாம். இது சம்மந்தமாக கணபதியின் பெற்றோரும் அஞ்சலியைத் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திப்பனூத்து கிராமத்தில், கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அன்றிரவு கணபதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாராம்.

இருவருக்குமிடையே மீண்டும் சண்டை வந்ததாம். கோபமடைந்த கணபதி சத்தம் போட்டுவிட்டு பைக்கை எடுத்துவிட்டு வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். இதில் மனமுடைந்த அஞ்சலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவிழா முடிந்து நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கணபதியின் பெற்றோர், அஞ்சலி தூக்கில் சடலமாகத் தொங்கியதைப் பார்த்து அழுதுள்ளனர். அவர்களின் அழுகைக்குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் கணபதியின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

Also Read: சாதியால் வாழவிடமாட்டார்கள்; நம்மைப் பிரித்துவிட்டார்கள்!'- காதலன் தற்கொலை, உயிர் தப்பிய காதலி

எட்டயபுரம் காவல் நிலையம்

அஞ்சலியின் இறப்பிற்கு கணவர் கணபதியும், அவரின் பெற்றோரும்தான் காரணம் என, அஞ்சலியின் பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அஞ்சலியைத் தற்கொலை செய்துகொள்ளத் துண்டியதாக அவரது கணவர் கணபதியின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணனும் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ClZX96
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*