`இயற்கையின் தலைசிறந்த படைப்பு அவை!’ - சாக்பீஸ் முனையில் யானைகள் சிற்பம்; அசத்தும் ஆசிரியை

0

இன்று உலக யானைகள் தினம். அதையொட்டி புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான மோகனா, 158 சாக்பீஸ்களின் முனைகளில் யானைகளின் உருவத்தை தத்ரூபமாகச் செதுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து ஆசிரியை மோகனா கூறும்போது, ``இயற்கையின் தலைசிறந்த படைப்பான யானைகள்தான் நம் காலத்தில் நிலத்தில் வாழும் பிரமாண்டமான விலங்கு. காடுகளை வளர்க்கும் தோட்டக்காரனாக வலம் வரும் யானைகள், தங்களது வாழ்நாளில் சுமார் 40 லட்சம் மரங்கள் மற்றும் செடிகளை உருவாக்குகிறது.

ஆசிரியை மோகனா

Also Read: ``யானைகளின் வழித்தடத்தை மீட்காவிட்டால், மரபியல் சிக்கல் ஏற்படும்!" - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

அதனால்தான் அவற்றை `காடுகளின் ஆரோக்கியம்' என்று வனவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் 1971-ம் ஆண்டு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 177 பேராக இருந்த மக்கள் தொகை, 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி ஒரு சதுர கி.மீ-க்கு 382 பேராக அதிகரித்திருக்கிறது. ஆனால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 50,000 இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது அதில் பாதியாக குறைந்துவிட்டது. வேட்டையாடுதலும், காடுகளை ஊடறுத்துப் போடப்பட்ட சாலைகளில் ஏற்படும் விபத்துகளும் யானைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.

காடுகளின் தலைவன் சிங்கம் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் நாம், தலைமைப் பண்பு, காடுகள் மேலாண்மை, வழி அமைத்தல், விதை பரப்பல், ஆதார உயிரினம், பல்லுயிர் பேணுதல், பேருயிர் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கும் யானைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. யானை மந்தைகள் ஆண்டுக்குச் சுமார் 350 முதல் 500 சதுர கி.மீ வரை உணவுக்காகப் பயணிக்கின்றன. அப்படிப் பயணிக்க ஏதுவாக இருப்பவைதான் யானை வழித்தடங்கள். அந்த வழித்தடங்கள் அடைக்கப்படுவதால், ஆக்கிரமிக்கப்படுவதால் குறுகிய வட்டத்திற்குள்ளேயே மேய்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அவை தள்ளப்படுகின்றன.

wild elephants

Also Read: `தங்களுக்கான உணவைத் தாங்களே உருவாக்கும் யானைகள்!' - இயற்கையின் அதிசயம்

அதனால் உணவு தேவைக்காக ஊருக்குள் வரும் யானைகள் மின்சாரம் வைத்தும், விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன. காடுகளுக்குள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் யானைகளின் வழித்தடத்தை நாம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சுருக்கிவிட்டதால் யானைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் எனது இந்த சிறிய முயற்சி” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iDsyyX
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*