மலையாள சினிமா இயக்குநர் நாதுர்ஷா இயக்கத்தில் "ஈசோ" மற்றும் "கேசு ஈ வீட்டின்றெ ஐஸ்வர்யம்" ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவர உள்ளன. ஈசோ என்பது ஏசுவின் பெயரை குறிப்பதாகவும், ஏசு இந்த வீட்டின் ஐஸ்வர்யம் என்பதை கேசு இந்த வீட்டின் ஐஸ்வர்யம் என மாற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 'ஈசோ' சினிமாவில் கதாநாயகனாக நடிகர் ஜெயசூர்யாவும், கேசு ஈ வீட்டின்றெ ஐஸ்வர்யம் என்ற சினிமாவின் கதாநாயகனாக நடிகர் திலீப்பும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமா குறித்த டைட்டில் போஸ்டர் வெளியான உடன் சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது. இந்த சினிமா டைட்டில்களுக்கு சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈசோ சினிமா கிறிஸ்தவ மத நம்பிக்கையை சிதைக்கும் விதமாக உள்ளது என்று சில அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்த பெயரை மாற்றாமல் இருந்தால் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என கத்தோலிக்க காங்கிரஸ் என்ற அமைப்பு கூறியிருக்கிறது. மேலும் 'ஈசோ' என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்கமாட்டோம் என முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கூறியிருக்கிறார்.
Also Read: கேரளா: பி.எஸ்.பி வேட்பாளரைக் கடத்தியதாக பா.ஜ.க தலைவர்மீது வழக்கு; போராட்டம் அறிவித்த பா.ஜ.க தலைமை!
இந்த நிலையில், "அந்த சினிமாவில் மதம் சம்பந்தமாக எந்தக் காட்சிகளும் இல்லை. படத்தை பார்த்துவிட்டு கருத்து கூறட்டும். சினிமாக்களின் பெயர்களை மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால் அது மலையாள சினிமாவில் மோசமான வழக்கமாகிவிடும்" என இயக்குநர் நாதுர்ஷா தீர்க்கமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வட இந்தியாவில் உள்ளது போன்று சினிமாவில் மதத்தை புகுத்தும் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் நாதுர்ஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகிவருகிறது. அதுமட்டுமல்லாது வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பிஷப்புகள் இயக்குநர் நாதுர்ஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இயக்குநர் நாதுர்ஷா முஸ்லிம் என்பதால் இந்த சர்ச்சையை கிளப்புவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாதுர்ஷாவுக்கு ஆதரவாக மலையாள சினிமா தொழில்நுட்ப கூட்டமைப்பான மாக்டா (MACTA) அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து மாக்டா அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிபில், "நாதுர்ஷா இயக்கும் சினிமா பெயரை வைத்து தேவையில்லாத சர்ச்சையை கிளப்புவது கேரளத்துக்கு அழகு அல்ல. நாதுர்ஷாவுக்கு மாக்டா பின் துணையாக நிற்கும். சினிமா என்பது இந்த நூற்றண்டின் மதசார்பற்ற கலை வடிவம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AvibDo
via
