புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ளது குளவாய்ப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோயிலில் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு சென்றார். இந்நிலையில்தான் இரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சாமி சிலையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். தொடர்ந்து அங்காளம்மன் சாமி சிலையை ஆயுதம் கொண்டு சிலையை உடைத்துள்ளார். இதனால் சிலை இரண்டாகப் பிளந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து கோயில் பூசாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
Also Read: கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த வெண்கல சாமி சிலை! - அதிர்ச்சியில் கும்பகோணம்
பூசாரி விராலிமலை காவல் நிலையத்திற்கு இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குளவாய்ப்பட்டி அருகே பேராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(41) என்பவர் மதுபோதையில் சாமி சிலையை உடைத்துள்ளார் என்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், கண்ணன் அந்தப் பகுதியில் டெய்லராக உள்ளார். அவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். டெய்லராக இருந்த கண்ணன் டெய்லர் தொழிலில் நஷ்டமடைந்ததால், சாமி சிலையை உடைத்துள்ளார் என்று போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்து கண்ணனைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அம்மன் சிலை உடைக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Wa3w1Y
via
