வேலுமணியை விட்டாலும், கே.சி.பி நிறுவனத்தை விடாத அதிகாரிகள்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு!

0

தமிழ்நாடு முழுவதும் வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். கோவையில் வேலுமணி வீட்டில் சோதனை நடக்க, சென்னையில் இருந்த வேலுமணியிடமும் நேரடியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கே.சி.பி அலுவலகம்

Also Read: வேலுமணி ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவாரா? | The Imperfect Show

நேற்று இரவு ரெய்டு முடிந்தநிலையில், வேலுமணி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டார். அதிகாரிகள் வேலுமணியை விட்டாலும், கோவை கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் அருகே உள்ள கே.சி.பி இன்ஜினியரிங் அலுவலகம், பெருஞ்சாமி கவுண்டம்பாளையம் அருகே உள்ள கே.சி.பி குவாரி ஆபிஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், நேற்று சோதனையின் போது நெஞ்சுவலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read: நேற்று எம்.ஆர்.வி., எஸ்.பி.வி., நாளை சி.வி.பி-யா ?! - திமுக அரசின் அடுத்த மூவ்?!

கே.சி.பி நிறுவனம்

2012-13 நிதியாண்டில் ரூ.42.54 கோடி நிகர லாபத்தை எட்டிய கே.சி.பி நிறுவனம், 2018-19 நிதியாண்டில் ரூ.453.92 கோடி நிகர லாபத்தை எட்டியுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும், வேலுமணி சகோதரர் அன்பரசன் மற்றும் சந்திரபிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டே தொழில் நிமித்தமாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பல சொத்துகள் சந்திரபிரகாஷ் கன்ட்ரோலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்திரபிரகாஷ்

அதனால்தான் நேற்று சோதனையின் போது சந்திரபிரகாஷ்க்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் பல ஆவணங்கள் சிக்கும் என்பதால், தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sa6MWQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*