’என்னை உடலோடு கலந்து பெற்ற அன்னை கடலோடு கலந்தார்கள்!’ - ஆளுநர் தமிழிசை உருக்கம் !

0

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

டிவிட்டர் பக்கத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்த புகைப்படம்

தொடர்ந்து கிருஷ்ணகுமாரி அவர்களின் அஸ்தி சென்னை அடையார் கடற்கரையில் கரைக்கப்பட்டது. அஸ்தியை கரைத்துவிட்ட பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் தாய் கிருஷ்ணகுமாரியுடனான நினைவுகளை உருக்கமாக பதிவு செய்திருக்கிறார் தமிழிசை . அந்தப் பதிவில்..

”என்னை உடலோடு கலந்து பெற்ற அன்னை...

இன்று கடலோடு கலந்தார்கள்...

அஸ்தியைக் கரைத்து

ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டோம்...

அம்மாவிற்கு பிடிக்காததை நான் செய்தது கிடையாது...

அழுதால் அம்மாவிற்கு பிடிக்காது...

ஆனாலும் அழுது முடித்து விட்டோம்...

விழிகளில் கண்ணீர் வேண்டாம்...

Also Read: புதுச்சேரி: "மருத்துவர்கள் வெள்ளை உடை அணிந்த தேவதைகள்!" -துணைநிலை ஆளுநர் தமிழிசை!

வழிகாட்டுவார்கள் அம்மா...

என்ற நம்பிக்கையுடன்...

வெற்று உணர்வுகள் இருந்தாலும்...

அது அம்மாவிற்கு பிடிக்காது என்பதால்...

அம்மாவிற்கு பிடித்த வெற்றி உணர்வோடு

வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறோம்...” என்று பதிவிட்டிருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3D7Fk0I
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*