``வெள்ளை அறிக்கையை வரவேற்கிறோம்; தேர்தல் வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறோம்''- ஜி.ராமகிருஷ்ணன்

0

தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன்

Also Read: `வெள்ளை அறிக்கை' - அதிமுக ஆட்சியின் ஆவணப்படமா, திமுக ஆட்சியின் வரி வசூலுக்கான ட்ரெய்லரா?

2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், திமுக-வின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணனும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் ’’தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், உரிய முறையில் தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்தி, குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

பழனிவேல் தியாகராஜன்

மேலும், கொரோனா பரவலின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மக்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களைக் கட்டி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lQBGCa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*