புதுச்சேரி: `சென்டாக் விண்ணப்பத்திற்கு கட்டணம் இலவசம்’ - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு !

0

புதுச்சேரியில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், இளநிலை கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் நுண்கலைகள் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் முறையை கல்வித்துறை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சேர்க்கைகள் இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 31-ம் தேதி அதற்கான கடைசி நாள். www.centacpuducherry.in என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவக் கல்விக்கான சேர்க்கைகள் குறித்த விபரங்கள் நீட் தேர்வு நடந்த பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமான செண்டாக் விண்ணப்பங்களுக்கான கட்டணம் இலவசம்.

Also Read: `சென்டாக் வழக்கு; ரூ.5 கோடி கட்டுமான ஊழல்!'-புதுச்சேரி சி.பி.ஐ கிளையின் பின்னணியை விவரித்த கிரண்பேடி

மொத்தமுள்ள 8,167 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்டாக் தொடர்பான சந்தேகங்களுக்கு www.centacpuducherry.in என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2XoPJoy
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*