தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு, பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி நந்தினி பிரபா. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றரை வயதில் மனோஜ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணசாமி தற்காலிக பணியாளர் என்பதால், அவருக்கு கிடைக்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை.
அவர் வசித்துவந்த மந்தித்தோப்பு வீட்டிலிருந்து தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு பைக்கில்தான் சென்று வருவாராம். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐத் தாண்டிய நிலையில், கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு பெட்ரோலுக்கே போய் விடுகிறதாம். இதனால், கையில் பணம் இல்லாத நேரங்களில் மனைவி நந்தினி பிரபாவிடம் பணம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றும் கிருஷ்ணசாமி, மனைவியிடம் பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மாமனாரிடம் (கிருஷ்ணசாமியின் தந்தை) பணம் வாங்கித்தருவதாகக் கூறி உள்ளார். இதையடுத்து, ”வாங்குற சம்பளம் குடும்பம் நடத்தவே போதலை. இந்த நிலைமையில, அதுல பெட்ரோலுக்கே பாதி தொகை போயிடுது. நாளுக்கு நாள் விலைவாசியும் கூடிக்கிட்டே போகுது. பெட்ரோல் செலவுக்குகூட ஒவ்வொருத்தட்டயா பணம் கேட்க வேண்டியதிருக்கு” எனப் புலம்பிக்கொண்டே இருந்தாராம் கிருஷ்ணசாமி. அப்போது அவரது மனைவி நந்தினி பிரபா, பாத்ரூம்க்குள் குளிக்கச் சென்ற போது, தீடீரென வீட்டில் மனைவி சேலையினை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Also Read: மும்பை: இறந்த தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு
பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கணவர் கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார் மனைவி. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், பெட்ரோல் போடுவதற்கு பணம் தர மறுத்த காரணத்தினால்தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yru3Wq
via
