’ஆண்டிப்பட்டி – தேனி’ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி; மகிழ்ச்சியில் தேனி மக்கள்!

0

’மதுரை – போடி’ இடையே 90.4 கி.மீ. துார மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு ரூ.450 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், சில ஆண்டுகளாக முடங்கிய இப்பணி கடந்த இரு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக ’மதுரை- உசிலம்பட்டி’ இடையே ஏற்கனவே பணி முடிந்தது. அதன்பின் ’உசிலம்பட்டி – ஆண்டிபட்டி’ இடையே கடந்த டிசம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ’ஆண்டிபட்டி – தேனி’ இடையிலான 17 கி.மீ. துார அகல ரயில்பாதை பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

சோதனை ஓட்டம்

கொரோனா ஊரடங்கால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது. தேனி ரயில்வே ஸ்டேஷன், மூன்று இடங்களில் ரயில்வே கேட்டுகள், சிக்னல்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் வரும் ஆகஸ்ட் 15-க்குள் அதிகாரப்பூர்வ சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய உள்ளார்.

அதற்கு முன்னதாக, இன்று ’ஆண்டிபட்டியில் இருந்து தேனி’ வரை ரயில் இன்ஜினை 80 கி.மீ. வேகத்தில் இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக ’ஆண்டிபட்டி முதல் தேனி’ வரை ரயில் பாதையின் இருபுறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆண்டிப்பட்டியில் ரயில் இன்ஜின் முன்பாக பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 11.20 க்கு புறப்பட்ட ரயில் இன்ஜின் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பாதைகளைக் கடந்து சரியாக 11.40 மணிக்கு தேனி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

Also Read: `ரயில் சக்கரத்துல சிக்கிய இளைஞரைப் பார்த்தப்போ..!’ - `திக் திக்' நொடிகளை விவரிக்கும் பெண் போலீஸ்

சோதனை ஓட்டம்

மீண்டும் 11.50 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டி நோக்கி சென்றது. இதேபோல, மேலும் இரண்டு முறை இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அகல ரயில் பாதையில் ரயில் இன்ஜின் வருவதைக் கண்ட மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jl6rMS
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*