புதுச்சேரி: `மத்திய அரசு நிதி குறைவாக கொடுக்கிறது!’ – சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி வேதனை

0

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி, கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் காந்தி சதுக்கத்தில் இன்று காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறை, தேசிய மாணவர் படை, முன்னாள் இராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், “யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவிலோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழுவிலோ சேர்க்கப்படவில்லை.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உரிய வழிமுறைகளை ஆய்வு செய்து நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கி வரும் 60:40 என்ற விகிதாசாரத்தை மாற்றி 2016-ம் ஆண்டிற்கு முன்பு இருந்ததைப் போலவே 90:10 என்ற விகிதாசாரத்தில் வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் 6-ம் தேதியன்று நடைப்பெற்ற நிதி ஆயோக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறோம். மேலும் மத்திய அரசின் நிதி உதவியானது இதுவரை ஒரே நிலையாகவே இருந்து வந்திருக்கிறது. 2021-2022-ம் நிதி ஆண்டிலும் 1.58 சதவிகிதமாகவே இருக்கிறது. அதேபோல கடந்த 5 ஆண்டுகளிலும் 4 முதல் 5 சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவில்தான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்.

Also Read: புதுச்சேரி: `நாராயணசாமி அரசு பதவி விலகாவிட்டால்..!’ - அதிரடி காட்டும் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி

சரக்கு மற்றும் சேவை வரியின் இலக்கு அடிப்படையிலான வரிவிதிப்பு கொள்கையின் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. அடுத்த ஆண்டு 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த வருவாய் இழப்பு ரூ.140 கோடியாக அதிகரிக்கும். எனவே மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் அல்லது 01.07.2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடு செய்ய கூடுதல் மத்திய நிதியை வழங்க வேண்டும் என்றும் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Also Read: சுதந்திர தினம்: `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AIZADT
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*