`அதிமுக-வில் இருந்து விலகியது ஏன்?!’ - நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி விளக்கம்

0

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான விஜிலா சத்யானந்த் அண்மையில் தி.மு.க-வில் இணைந்தார். அதன்பின்னர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தி.மு.க-வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க--வில் இணைந்தபோது

இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராக இருந்த வசந்தி முருகேசன், அ.தி.மு.க நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளராக இருந்தவரான பள்ளிக்கோட்டை செல்லதுரை ஆகியோர் தி.மு.க-வில் இணைந்தனர்.

தி.மு.க-வில் இணைந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி,அ.தி.மு.க-வில் இருந்தபோது கட்சிக்காக தீவிர களப்பணி ஆற்றியவர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சி நடந்தபோது தனி நபராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கட்சி மீதான அவரது தீவிரப் பற்று காரணமாகவே நெல்லை மாநகராட்சி மேயராகும் வாய்ப்பை அவருக்கு ஜெயலலிதா வழங்கினார்.

தற்போது தி.மு.க-வுக்குச் சென்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையிலும் அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்பதே கட்சித் தொண்டர்களுக்குப் புரியவில்லை.

அ.தி.,மு.க-வில் பெண்களுக்குத் துளியும் மரியாதை கிடையாது. அதனால் தான் மகளிரணி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். தமிழகத்தில் சாதாரண மக்களுக்காக இயங்கும் இயக்கம் தி.மு.க என்பதைப் புரிந்துகொண்டதால் தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தேன். முதல்வர் ஸ்டாலின் உழைப்புக்கு உதாரணமாகத் திகழ்கிறார். நாங்கள் கட்சியில் சேரும் நிகழ்ச்சியின்போது தான் முதல் முறையாக அவரை நேரில் சந்தித்தேன்.

தி.மு.க-வில் இணைந்த புவனேஸ்வரி, வசந்தி முருகேசன்

கட்சித் தொண்டர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையை நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன். புதிதாகக் கட்சிக்கு வந்த எங்களை எல்லாம் மகிழ்ச்சியாக வரவேற்றபோது தாயின் அன்பை அவரிடம் கண்டேன். சரியான இடத்துக்கு வந்த மனநிறைவு அவரைப் பார்த்ததும் ஏற்பட்டது.முதல்வரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கழகப் பணியாற்றுவேன்” என்றார்.

விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, வசந்தி முருகேசன், பள்ளிகோட்டை செல்லதுரை எனப் பலரும் அடுத்தடுத்து தி.மு.க-வில் சேர்ந்துள்ள விவகாரம் குறித்து அ.தி.மு.க-வினர் பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VC6RGm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*