மீண்டும் இணையும் சூர்யா - பாலா காம்போ... ஓடிடியை டார்கெட் செய்யும் புதுப்படம்?

0
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் பாலா. பாலா படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். தனக்கு 'சேது' திருப்புமுனையாக இருந்தது போல, தன் மகன் துருவ், பாலாவின் இயக்கத்தில் அறிமுகமாக வேண்டும் என்று நினைத்தார் விக்ரம். 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று 'வர்மா' என்ற பெயரில் இயக்கினார் பாலா.

படத்தை பார்த்துவிட்டு, அதிருப்தியான விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு 'படத்தை மீண்டும் எடுக்கலாம். வேறு இயக்குநரை இயக்கச் சொல்லலாம்' என முடிவு செய்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் பணியாற்றிய கிரிசய்யாவை படத்திற்குள் கொண்டு வந்து 'ஆதித்ய வர்மா' என ரீமேக் செய்தனர். இந்தப் பிரச்னையில் இருந்தே இயக்குநர் பாலா மன உளைச்சலில் இருந்தார்.

அதர்வா

இதன் பிறகு சில மாதங்கள், இயக்குநர் பாலாவை பற்றிய எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. பிறகு, தான் பணியாற்றிய ஹீரோக்களைச் சந்தித்து படம் இயக்குவதற்காக பேசியிருக்கிறார். அந்தச் சமயத்தில் எல்லோரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் படம் ஆரம்பிக்கவில்லை. பிறகு ஆர்யா, அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. சில மாதங்கள் கழித்து, உதயநிதி - அருள்நிதியை சேர்த்து இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. சில வாரங்களுக்கு முன், சூர்யாவை இயக்குகிறார் பாலா என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

Also Read: பிரித்விராஜின் `குருதி': துணிந்து மதங்களை விமர்சிக்கிறதா, பயந்து அடிப்படைவாதம் பேசுகிறதா?

விசாரித்து பார்த்ததில், சூர்யாவை பாலா மீண்டும் இயக்குவது உண்மைதான் எனத் தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பு, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அதர்வாவை நாயகனாக வைத்து படமொன்றை இயக்கவிருக்கிறார் பாலா. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை ஓடிடி நிறுவனத்திற்காகவே எடுக்கின்றனர். அது நெட்ஃபிளிக்ஸ்காகவா அல்லது அமேசான் ப்ரைமுக்காக என்பது விரைவில் தெரியவரும். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் பாலா இயக்கவிருப்பதால், அந்தப் படத்திற்கு வழக்கமான எதிர்பார்ப்பைத் தாண்டி அதிகமாகவே இருக்கிறது.

பாலா இஸ் பேக்!



from தமிழ் சினிமா https://ift.tt/3jOc8mF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*