தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேருக்கு வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read: `7 கிராமப் பகுதிகளில் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி!' - சாதித்த கரூர் மாவட்ட செவிலியர்கள்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,554 பயனாளிகளுக்கு ரூ 1,86,48,000 மதிப்பில் முதியோர் உதவித் தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் 804 பயனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 44 பயனாளிகளுக்கு, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் உள்ளிட்ட மொத்தம் 2,424 பயனாளிகளுக்கு, 2,03,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய, தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் கொரோனா 2 - ஆம் அலையில் ஊரடங்கு அறிவிக்கபட்ட காலத்தில், கொரோனா பாதிப்பினால் தொற்றாநோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்தது. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு தினம்தோறும் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள் தமிழகத்தில் 20 லட்சம் பேர் உள்ளனர். நானும் கூட கடந்த 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளியாக உள்ளேன். அதற்காக, மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். அதனால், இனி ஒரு உயிரிழப்பு கூட தமிழகத்தில் மருந்து மாத்திரைகள் இல்லாததால் ஏற்படக் கூடாது என்பதை தமிழக முதல்வர் அக்கறையாக கொண்டுள்ளார். அந்த விசயத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக சுகாதாரத் துறை வரலாற்றில் முதல் முறையாக, 'மக்களை தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
Also Read: `20 லட்சம்பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை; தமிழக அரசின் `மக்களைத் தேடி மருத்துவம்' செய்யப்போவது என்ன?
இத்திட்டம் துவங்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 37 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன்மூலம், வரும் 2021டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், முக கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான், கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ள முடியும்" என்று அவர்பேசியபோது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பயனாளி ஒருவர், முறையாக முக கவசம் அணியாமல் இருந்ததை கவனித்தவர், அதை சுட்டிக்காட்டி, "மூக்குக்கு மேல் முகக்கவசம் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது" என கேட்டுக் கொண்டார். அதைதொடர்ந்து, அந்த பயனாளியும் தனது முகத்தில் முகக்கவசத்தை முறையாக அணிந்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/37ysPgn
via
