மணமக்களுக்கு மலர்களில் முகக் கவசம்; மதுரை பூக்கடைக்காரரின் புதுமையான முயற்சி!

0

திருமண விழாக்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த மணமக்களுக்கு மலர்களில் முகக் கவசம் தயாரிக்கும் மோகனின் திறமையும் புதுமையும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

மலர் முக கவசம் தயாரிக்கிறார்

கொரோனா 3-ம் அலை பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் கலந்துகொள்ள பொதுமக்களுக்குத் தடை விதித்துள்ளது.

அதே நேரம் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இன்னொரு பக்கம், நிகழ்ச்சிகளில் மக்கள் கட்டுப்பாட்டை மறந்து முகக் கவசம் அணிவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.

மலர் முக கவசம்

Also Read: `டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

இந்நிலையில், மணமக்களுக்கு ஏற்கெனவே பட்டு முகக்கவசம், வெள்ளி முகக்கவசம், தங்க முகக்கவசம், வைர முகக்கவசம் எனப் பல டிரெண்ட்களையும் கடந்த இரண்டு கொரோனா அலைகளில் பார்த்துள்ள நிலையில், இப்போது மணமக்களுக்கு மலர்களிலால் ஆன முகக் கவசத்தை மதுரையைச் சேர்ந்த பூக்கடைக்காரர் மோகன் தயாரித்து வருகிறார்.

மதுரை அம்மன் சன்னதி அருகே பூக்கடை வைத்திருக்கும் மோகனிடம் பேசின்னோம். ``முகக் கவசம் அனைவரும் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

பூக்கடைக்காரர் மோகன்

மணமக்களைப் பொறுத்தவரை, தங்களின் திருமண நாளில் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும், அதே நேரம் அது ஸ்பெஷலாகவும் தெரிய வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே, முகூர்த்தப் பட்டுப் புடவைக்கு மேட்சிங்கான முகக் கவசம், டிசைனர் முகக்கவசம் வரை பலவற்றையும் நாடுகின்றனர். எனவே, அவர்களுக்கு என பிரத்யேகமாக இந்த மலர் முகக்கவசத்தை உருவாக்கும் எண்ணம் வந்தது. முகூர்த்த நாளிலும் வழக்கமான முக்கக்கவசம் அணிவது போல் அல்லாமல், இது அவர்களை ஸ்பெஷலாக உணர வைக்கும் '' என்றவர் அதை உருவாக்கும் விதத்தை பகிர்ந்துகொண்டார்.

``ஒருமுறை பயன்படுத்தும் மூன்றடுக்கு முகக் கவசத்தில் மல்லிகை மற்றும் வண்ணப் பூக்களை வைத்து இந்த முகக் கவசத்தை உருவாக்கி வருகிறேன். மாலை அணிந்து மலர் அலங்காரத்துடன் இருக்கும் மணமக்கள் மலர்களால் ஆன முகக்கவசம் அணிந்திருப்பதை பார்க்க அழகாக இருக்கும். புகைப்படங்களிலும், அது ஓர் அழகிய கொரோனா கால நினைவாகப் பதிவாகும்.

பூக்கடைக்காரர் மோகன்

Also Read: புதுக்கோட்டை: கொரோனா நோயாளிகளுக்கு மூலிகைத் தாம்பூலம்; சித்த மருத்துவ பிரிவின் புது முயற்சி!

மலர் மாஸ்க் ஆர்டர்கள் இப்போது நிறைய வருகின்றன. ஒரு பக்கம் வியாபரமாக பார்த்தாலும் இன்னொரு பக்கம் மாஸ்க் அணிவதை வலியுறுத்தும் கொரோனா விழிப்புணர்வுக்கு நம்மால் முடிந்த முயற்சி என்ற வகையிலும் மகிழ்சியாக உள்ளது" என்றார்.

மதுரைக்காரங்க வித்தியாசமானவங்கதான்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AkK8Oi
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*