''ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வந்துடுச்சு'' - நடிகை நதியா!

0

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி நதியா. 'நதியா கம்மல்', 'நதியா வளையல்', 'நதியா புடவை' என ஒருகாலத்தில் ட்ரெண்ட் செட்டராக இருந்தவர் இப்போது மும்பையில் வசித்துவருகிறார். கதை தனக்குப் பிடித்திருந்தால் மட்டும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார் நதியா.

இதில் லேட்டஸ்ட்டாக லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் நதியா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இதன் ஒரு ஷெட்யூல் ஷூட்டில் நதியாவும் நடித்து முடித்து மும்பை திரும்பினார். அதன்பிறகு அடுத்த ஷெட்யூலுக்கான படப்பிடிப்பின் போது நதியாவை தொடர்பு கொண்ட போதுதான் அந்த யூனிட்டுக்கு நதியாவுக்கு கொரோனா என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

குடும்பத்தினருடன் நதியா

''நான் ரெண்டு டோஸ் வேக்சினேஷனும் போட்டுட்டேன். எனக்கு எப்படி கொரோனா வந்ததுனே தெரியல. என்னோட அப்பா, அம்மா, வீட்ல வேலை செய்றவங்கனு நாலு பேருக்கும் கொரோனா வந்துடுச்சு. வீட்லயே தனிமைப்படுத்திக்கிட்டு இருக்கோம்'' என யூனிட்டில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார் நதியா.

இதனால் நதியா நடிக்கவேண்டிய காட்சிகளை மட்டும் மாற்றிவைத்திருக்கிறதாம் லிங்குசாமி யூனிட்.

விரைவில் நலம்பெற வாழ்த்துகள் நதியா.



from தமிழ் சினிமா https://ift.tt/2W4c9Ls
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*